அகவிலைப்படி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை?
Dearness Allowance என்பதை தமிழில் பஞ்சப்படி அல்லது அகவிலைப்படி என்று
குறிப்பிடுவார்கள்! அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது இந்த அகவிலைப்படி!
காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை! பொதுவாக இந்த இரண்டாம் தவணை Dearness Allowance உயர்வினை அதிகபட்சம் மூன்றாவது வாரத்திற்குள் அறிவித்து விடுவார்கள். தற்போது அதையும் தாண்டி விட்டதால் ஊழியர்களுக்குள் பல்வேறு தந்தேகங்கள் எழத்தொடங்கிவிட்டன!
இப்போது, Dearenss அலவன்ஸ் எவ்வளவு அதிகரிக்கும் என்ற முதல் கேள்விக்கு வருவோம்?
Dearenss அலவன்ஸ் வருடத்திற்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதம் என இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படுகிறது! 7வது சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் Dearenss அலவன்ஸ் கணக்கிடப்பட்டு மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம், பெறுவோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Dearenss அலவன்ஸ் கணக்கிடுவதற்கு 12 மாத விலை வாசி குறியீட்டு எண்கள் (AICPIN என்று அழைக்கப்படும் All india consumer price index) அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தேவை!
அதாவது, ஜூலை 2023 முதல் வழங்கப்படும் Dearenss அலவன்ஸ் சதவீத உயர்வினை
கணிக்கிட ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரையிலான குறியீட்டு புள்ளிகள் தேவை.
இந்த குறியீட்டு புள்ளிகளை மாதந்தோறும் Labour Bureau என்று அழைக்கப்படும் மத்திய
அரசு நிறுவனம் துல்லியமாக கணக்கிட்டு தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டு வருகிறது.
7 th CPC பரிந்துரைத்த பார்முலா படி, ஜூலை 2023 முதல் DA 46.23 சதவீதம் உயர்வு
பெற்றுள்ளது. தசம எண்களை தவிர்த்து 46% உயர்த்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது!
இருப்பினும் மத்திய அரசின் கேபினட் Committee ஒப்புதல் வழங்கப்பட்ட பின்பே 46%
உயர்வினை அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ள முடியும்! அதாவது, தற்போது வழங்கப்பட்டு வரும் 42% அகவிலைப்படியுடன் 4 சதவீதம் கூடுதல் அகவிலைபடி உயர்வினை சேர்த்து 46 சதவீதம் கடந்த ஜூலை 2023 முதல் வழங்க மத்திய அரசு
அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!
Current DA = 42%
Additional DA = 4%
Revised or New DA = 46%
மத்திய அரசு ஊழியர்கள் இந்த 4 சதவீத அகவிலைபடி உயர்வினால் குறைந்தபட்சம் 720
மாதந்தோறும் சம்பள உயர்வு பெறுவார்கள்! ஓய்வூதியம் பெருவோர்கள் தங்களது பென்சன் தொகையில் கூடுதலாக றைந்தபட்சம் 360 பெறுவார்கள்!
இதைத்தவிர, மத்திய அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்துப்படி நான்கு விதமான அளவுகளில் வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு போக்குவரத்துப்படியிலும் சற்று மாற்றத்தை தருகிறது!
மாதந்தோறும் போக்குவரத்து படியாக ரூ.900 வாங்கும் ஊழியருக்கு ரூ.36 கூடுதலாகவும்
1350 வாங்கும் ஊழியருக்கு 54 கூடுதலாகவும்
1800 வாங்கும் ஊழியருக்கு 72 கூடுதலாகவும்
3600 வாங்கும் ஊழியருக்கு 144 கூடுதலாகவும்
7200 வாங்கும் ஊழியருக்கு 288 கூடுதலாக கிடைக்கும்.
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு போக்குவரத்துப்படி இல்லாததால் இந்த உயர்வு அவர்களுக்கு பொருந்தாது!
அகவிலைப்படி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை?
பல்வேறு காரணங்களால் இன்னும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படவில்லை என்பதை நம்மால் அறியமுடிகிறது! காரணம் G-20 மாநாடு மற்றும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுவதால் இந்த வாரம் கேபினட் கமிட்டி கூட்டம் நடைபெற்றதாக தகவல் இல்லை! கவலை வேண்டாம், அரசு இயந்திரம் யாருக்காகவும் நிற்கப்போவதில்லை! தானாக செயல்பட்டுக்கொண்டே இருக்கும்! இதைவிட நெருக்கடியான பல சந்தர்ப்பங்களை, கடைசி நாளன்று அறிவித்து உடன்
வழங்கப்பட்ட அனுபவம் நமக்கு உண்டு!
கேபினட் கமிட்டி ஒப்புதல் தந்தபின் நடைபெறவேண்டிய அணைத்து வேலைகளும் தாயார் நிலையில் தான் இருக்கும்! கேபினட் கமிட்டி ஒப்புதல் கிடைத்த அடுத்த நாள் Finance மினிஸ்ட்ரி அகவிலைப்படி உயர்வினை கணக்கிட்டு வழங்க ஆணை பிறப்பித்து விடும்! மாத இறுதி நாளுக்கு ஒரு நாள் முன்னதாக ஒப்புதல் கிடைத்தால் கூட இந்த மாத சம்பளத்தில் போட்டு விடுவார்கள்!
அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு எப்போது அறிவிக்கும்?
மத்திய அரசு கூடிய விரைவில் அறிவிக்கும்! அடுத்த Union Cabinet Committee கூட்டம் புதன்
அல்லது வியாழன் அன்று நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது! அதில் Economic Affairs என்ற பிரிவின் கீழ் Agenda Points ஒன்றான DA உயர்வு குறித்து ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்!
ஆக, அடுத்த வாரம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெருவோர்களுக்கும் நல்ல செய்தி வரும் என நம்புவோம!
உங்களுடைய சம்பளத்தில் DA எப்படி கணக்கிடுவது? அத்துடன் DA Arrears கணக்கிடுவது
எப்படி என்று அடுத்த வீடியோவில் விரிவாக பார்ப்போம்!
Leave a Reply